சென்னை:
வரதட்சணைக்கொடுமை குற்றத்திற்கு அதிகபட்சமாக வழங்கப்பட்டு வந்த 7 ஆண்டுகள் சிறை தண்டனையை 10 ஆண்டுகளாகவும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் மாற்றி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த முதலமைச்சர் , இந்தியதண்டனைச் சட்டத்தில் பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக் கான தண்டனையை மேலும் கடுமையாக்க மத்திய அரசின் அனுமதி பெற்று சில திருத்தங்களைக் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது என்றார்.தண்டனைச் சட்டம் பிரிவு 304 (பி) வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச 7 ஆண்டுகள் சிறை தண்டனையை 10 ஆண்டுகள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
பிரிவு 354 (பி) குற்றம் நோக்கத்துடன் (பெண்களின் ஆடை களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாகவும் அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை மேலும் கடுமையாக்கி 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.பிரிவு 354 (டி) தவறான குற்றநோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந் தால் இரண்டு முறையும் தொடர்ந்து குற்றம்இழைத்தால் தற்போது வழங்கப்படும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்படும்.பிரிவு 372 பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373-ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட் ட்பட்ட குழந்தைகளை விலைக்கு வாங்குதல் குற்றத்திற்கு தற்போது வழங்கப்படும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு பதிலாக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை யாகவும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.