சென்னை:
‘அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்’ போராட்டம் வெற்றிபெற பாடுபட்டோருக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், காஷ்மீரில் இழந்த உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும்புதிய கல்வித் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திட்டமிட்டதற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
ஆர்ப்பாட்ட இயக்கத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமிய இமாம்கள், அரசியல் இயக்கத்தினர், கல்வியாளர்கள், தொழிற்சங்க இயக்கத்தினர், மாணவர்கள் ஆகியோர்பெரும் எண்ணிக்கையில் ஆதரவு அளித்துள் ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழு தன்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்த அனைத்துமாவட்டக்குழுக்களுக்கும் நிர்வாகி களுக்கும் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழு சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.