சென்னை, ஏப்.20- சட்ட போராட்டத்தில் சசிகலா வென்றால் அ.ம.மு.க.வுடன் அதிமுகவை இணைப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“ சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அ.ம. மு.க.வில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என்றார்.சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார்.எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன். சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அ.ம.மு.க. துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம்.அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். சட்டபோராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம் என்றும் தினகரன் கூறினார்.