tamilnadu

img

ஜூன் 24-ல் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம்

சென்னை:
தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை ஜூன் 28-ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சட்டப் பேரவைத் தலைவர் அறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேரவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது, எந்தெந்த அலுவல்களை மேற்கொள்வது என முடிவு செய்யப்படும்.