tamilnadu

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு இன்று கூடுகிறது

 சென்னை, ஜூன் 23- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அன்றைய தினம் மறைந்த எம்.எல். ஏ.க்கள் சூலூர் கனகராஜ், விழுப்புரம் ராதாமணி ஆகியோரது மறைவுக்கு அனுதாபம் தெரி விக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் துறை வாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறும். பொதுவாக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, சபை கூடிய அன்றைய தினம் பேரவைத் தலைவர் தலைமை யில் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்வார்கள். ஆனால் இந்த கூட்டத் தொடரின்போது பேரவைத் தலைவர் ப. தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வருவதால் முன் கூட்டியே பேரவை நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யவுள்ளனர். இதனால், சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சபையை எத்தனை நாள் நடத்த வேண்டும், என்னென்ன மானியக் கோரிக்கை களை எந்தெந்த தேதியில் எடுத்துக் கொள்வது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை முதல் நாளில் எடுத்துக் கொள்வதா? அல்லது மறுநாள் எடுத்துக் கொள்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்க ளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.