சென்னை,ஜூன் 27- தமிழக சட்டமன்றக் கூட்டம் ஜூன் 28 அன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங் கள் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத்தில் பிப்ர வரி 8 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை பெறாமல் சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. பல்வேறு அரசுத் துறை களின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்ற பின், அமைச்சர்கள் அவற்றுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் மீதான விவா தத்தில் பங்கேற்பது குறித்து ஆலோ சிப்பது தொடர்பாக, இன்று 11.30 மணியளவில் தலைமை அலு வலகத்தில், அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை தலை மைச் செயலகத்தில், சட்டமன்றத் தலைவர் தனபாலை, அவரது அறையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.