tamilnadu

img

தமிழக சட்டமன்றம் மே 11ல் கூடுகிறது....

சென்னை:
தமிழ் நாட்டின் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகதலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி155 இடங்களில் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள் ளது. ஆளும் கட்சியாக இருந்தஅதிமுக கூட்டணி 75 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆட்சியமைப்பதற்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக 125 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங் களிலும் ஆக மொத்தம் 133 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும் பான்மை பெற்றது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 பேர் கொண்ட அமைச்சரவை மே 7ஆம் தேதி பதவியேற் றுக் கொண்டது. இதனைத்தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக சட்டப்பேரவை கூட்டம் சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் கூடுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடும்பேரவையில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுதிமொழி அல்லதுபற்றுறுதி உறுதி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.12ஆம் தேதி புதன்கிழமைசட்டப் பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றுசட்டப் பேரவை செயலாளர்சீனிவாசன் வெளியிட்டிருக் கும் அறிக்கையில் தெரிவித் திருக்கிறார்.

தற்காலிக அவைத்தலைவர் கு.பிச்சாண்டி
இதனிடையே, சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர்  தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த உறுப்பினர் கு. பிச்சாண்டி தற்காலிக அவைத்தலைவராக அறிவிக்கப்பட் டுள்ளார். அவர்,மே 10 ஆம் தேதி திங்களன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.செவ்வாய் அன்று அவைத் தலைவராக  பிச் சாண்டி   மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைக்கிறார்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூத்தஉறுப்பினர் கோவி. செழியன் அரசு கொறடாவாக நியமிக் கப்பட்டுள்ளார்.