tamilnadu

img

தமிழக சட்டமன்றம்  28-ஆம் தேதி கூடுகிறது

 சென்னை,ஜூன் 20- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28 ஆம் தேதி  காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலர்  அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றது. அத்துடன்  ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு, பலத்த எதிர்பார்ப்புக ளுக்கிடையே வரும் 28 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.  சுமார் ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொட ரில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட வுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கூட்டத்தொடர் நடைபெற்ற போது மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.  அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்கள் சூலூர் கனக ராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டு ஒத்திவைக்கப்படும். அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூடி பேரவையை எத்தனை நாட்க ளுக்கு நடத்துவது, எந்தெந்த அலுவல்களை மேற்கொள்வது  என முடிவு செய்யும். எனவே, வரும் 29ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பேரவைத் தலைவர் ப. தனபாலுக்கு எதிராக திமுக அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ள  நிலையில், அது குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில்  முடிவுசெய்யப் படலாம். அதேசமயம், அரசின் பலத்தை நிரூ பிக்கச் செய்யும் வகையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிடக்கூடும் என்றும் கருதப்படுகிறது. மேலும் அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிதி  ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் பங்கேற்பு, தண்ணீர்  தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால், அவையில் காரசார விவா தங்களுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது