சென்னை:
சுழற்சி முறையில் காவலர்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என காவல்துறை தலைவர் ஜே.கே.திரிபாதி அறிவித்துள்ளார்.கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்படும் பொதுமுடக்கத்தைத் தீவிரமாக அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பணியில் ஈடுபடுவோரில் ஆயிரக்கணக்கான காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தொற்று உறுதியாவதால், சுழற்சி முறையில் 20 சதவீத காவலர்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.