tamilnadu

img

சமூக நீதிக் கொள்கையை உயர்த்தி பிடித்தவர் பேராசிரியர் படத்திறப்பு விழாவில் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை, மார்ச் 15- சமூக நீதிக் கொள்கையை தனது இறுதிமூச்சு வரை உயர்த்திப் பிடித்தவர் பேராசிரியர் க.அன்பழகன் என அவரது படத்திறப்பு விழாவில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். மறைந்த திமுக பொதுச்செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிடர் கழகத்தலை வர் கி.வீரமணி தலைமையில் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. க.அன்பழகன் உருவப்படத்தை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பேராசிரியர் எனக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி தந்தையாக வும் இருந்தார். கருணாநிதிக்கு மட்டும் ஸ்டாலின் வாரிசு அல்ல, எனக்கும் வாரிசுதான் என்று அறிவித்தவர்” பேராசிரியர். 43 ஆண்டு காலம் பொதுச் செய லாளராக பேராசிரியர் இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்தவர். இந்த இயக்கம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அவரது பணி முக்கிய மானது. பேராசிரியர் மறைவு என் இதயத்தை உலுக்கிக் கொண்டி ருக்கிறது. கருணாநிதி மறைந்தபோது பேராசிரியர் இருக்கிறார் என்ற மன நிறைவோடு இருந்தோம். அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட திட்ட மிட்டிருந்தோம். பேராசிரியர் விட்டுச் சென்ற பணிகளை கருணாநிதி வழியில் நின்று பாடுபட, செயல்பட உறுதி யேற்போம்” என்றும் தெரிவித்தார்.
வாழ்ந்து கட்டியவர்!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,“தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார், இரண்டா வது பேராசிரியர் க. அன்பழகன். இந்த இயக்கம் தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று பெரியார் கூறினார். தன்மானத்தை விட பெரிது இனமானம். தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் போட்டி வரும் போது தன்மானம் தோற்க வேண்டும், இனமானம் வெற்றிபெற வேண்டும் என்று பெரியார் கூறியது போல் வாழ்ந்து காட்டியவர் அன்பழகன். அத னால்தான் அவர் இனமானப் பேராசிரி யர் என்று அழைக்கப்பட்டார்” என்றார்.
கலங்கி நிற்கிறோம்!
திமுக பொருளாளர் துரைமுருகன், “எங்கள் இதயத்தின் சுமை இறங்க வில்லை. ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்தது போல் கலங்கியி ருக்கிறோம். 43 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனுக் கும் கருணாநிதிக்கும் ஒருநாள் கூட கருத்து வேறுபாடு வந்தது கிடையாது” என்றார்.
நாகரீகம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி யினர் கேட்கும் கேள்விகளுக்கு கூட நாகரீகமாக பதில் அளிக்கக் கூடியவர் பேராசிரியர். தமிழ் சமூகத்தில் சுயமரி யாதை நீடித்திருக்கிறது என்றால் அதற்கு பேராசிரியரும் ஒரு காரணம். இன்னமும் பாசிச உணவுர்கள் கொடி கட்டிப் பறக்கிறது. அதை முறியடிக்க வேண்டும்” என்றார்.
பாசிசத்தை அனுமதியோம்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுகவை யும் ஸ்டாலினையும் பலவீனப்படுத்தி னால் தங்களை பலப்படுத்திக்கொள்ள லாம் என பாசிஸ்ட்டுகள் நினைக் கிறார்கள். பாசிசம் நாடு முழுவதும் யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. பாசிசத்தை ஒருபோதும் அனுமதி யோம் என சபதம் ஏற்போம்” என்றார்.
மொழியை பாதுகாத்தர்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் கள் கருணாநிதி, பேரா சிரியர் க.அன்பழகன். சாதியமும் மதவா தமும் தமிழகத்தை சூழ்ந்துள்ளது. சாதிய, மதவாத சக்திகள் புறவாசலில் வர முயற்சிக்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அரசியலில் புறங்கூறுதல், போட்டி, பொறாமை இல்லாதவர் பேராசிரியர். நாட்டை, மொழியை, இனத்தை காக்க வும் பாடுபட்டவர் பேராசிரியர்”என்றார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், பேராசிரியர் அன்பழக னின் பேரன் வெற்றி அழகன், பேராயர் எஸ்றா சற்குணம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினர்.

‘நிதானத்தின் மறுபெயர் அன்பழகன்” கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

தந்தை பெரியார் திரவிட இயக்கத்தை உருவாக்கிய நேரத்தில் பகுத்தறிவு, சமூக நீதியால் ஈர்க்கப்பட்டு ராமைய்யா என்ற பெயரோடு தன்னை இணைத்துக் கொண் டார் பேராசிரியர். அன்பழகன் என்ற தமிழ் பெயரோடு திராவிட கழகத்திலே வளர்ந்து பேராசிரியராக பரிணமித்து, சமூக நீதி கொள்கையில் உறுதியோடு வாழ்ந்தவர்.  திரவிட இயக்கம் சந்தித்திருக்கிற பல்வேறு இடர்பாடுகளை திறமையுடன் சமாளித்தவர். திமுகவிற்கு சோதனை வந்தபோதெல்லாம் கருணாநிதிக்கு உற்ற துணையாக இருந்தவர். அவசர நிலை பிரகடனத்தை கடுமை யாக எதிர்த்த இயக்கம் திமுக. இந்த இயக்கத்தின் ஆணி வேரிலிருந்து ஆலமரமாக உயர்ந்து நிற்கும் வரை நிறைவாக பணியாற்றிய பெருமை பேராசிரியருக்கு உண்டு.  கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இருந்தது தனிப்பட்ட நட்பல்ல, பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கை, சாதியை வெறருக்க வேண்டும் என்பதிலும் ஏற்பட்ட கொள்கை இணைப்புத்தான் இருவரையும் இணைபிரியா மல் இருக்க உதவியது. ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி தனது கடமையை உறுதியோடு நிறைவேற்றிய வர் பேராசிரியர். நாடு பல்வேறு சோதனைகளை சந்தித்துக் கொண்டி ருக்கிறது. 70 ஆண்டு கால இந்திய வரலாற்றை மதவெறி பாஜகவினர் மாற்றிவிடுவார்களோ? அம்பேகர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை குழித் தோண்டி புதைத்து விடு வார்களோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.  நாட்டின் பன்முகத்தன்மை, மொழியுரிமை, அரசியல் உரிமை, ஜனநாயக உரிமை, மாநில உரிமை மதச்சார் பின்மைக்கு சமாதி கட்ட பாஜக நினைக்கிறது. பாஜகவை சந்திக்க தயார் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி ஸ்டாலின் தலைமையிலே மிகப் பெரிய வெற்றிபெற்றது.  தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும், நெருக்கடியான பொருளாதாரத்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசத்தை பாதுகாக்க ஒரே அணியாக கூட்டணி கட்சிகள் இணைந்துள்ளோம். நாடும், அரசியல் சாசனமும், மொழியுரிமையும், மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாசிச சக்திகளுக்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைவரையும் திரட்டு கிற மகத்தான பணி நம்முன் உள்ளது. அந்த பணியை கருணாநிதி, அன்பழகன் வழியில் ஸ்டாலின் செய்வார். தற்போது அரசியலுக்குள் வர நினைப்பவர்களின் விருப்பத்தை ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது. பேராசிரியர் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதவர். “நிதானம் என்றால் பேராசிரியர், பேராசிரியர் என்றால் நிதானம்” என்ற அடிப்படையில் திகழ்ந்தவர்.  அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வருகிற போதும் சரி, எதிரிகளை விமர்சிக்கும் போதும் சரி பண்பு தவறாமல், நாகரீகம் தவறாமல் விமர்சிப்பவர் என்று சுட்டிக் காட்டி னார். ஆசிரியர் வீரமணி சமீபத்தில் பேராசிரியர் 1951ஆம் ஆண்டு எழுதிய இடஒதுக்கீடு நூலை புதுப்பித்துள்ளார். தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் வாழ்ந்தவர் பேராசிரியர். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.