சென்னை,நவ.24- குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் விசார ணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2016 ஆம் ஆண்டு செங்குன்றத் தில் இயங்கி வந்த ‘குட்கா’ ஆலை யில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை யில் சட்டவிரோதமாக, தடை செய் யப்பட்ட குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்ய கோடிக் கணக்கில் லஞ்ச பணம் மாறியது தொடர்பான டைரி சிக்கியது. அதில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ் கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பெயர் இடம் பெற்ற தாக பரபரப்பு தகவல் வெளி யானது. இதில் ‘குட்கா’ ஆலை உரிமை யாளர்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டி யன் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது. இந்த முறைகேட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதால் அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசார ணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அம லாக்கத்துறை சம்மன் அனுப்பி யுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி டி.கே.ராஜேந்திரனும், டிசம்பர் 3 ஆம் தேதி கூடுதல் ஆணையர் தினகரனும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.