tamilnadu

கோயம்பேடு பட்டாபிராம் புதிய மெட்ரோ வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள்

கோயம்பேடு பட்டாபிராம் புதிய மெட்ரோ வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள்

கோயம்பேடு – பட்டாபிராம் வெளி வட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரி வாக்க திட்ட அறிக்கையை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கே.கோபா லிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் ஆகியோர கடந்த  வியாழக்கிழமை சமர்ப்பித்தனர்.  அதில்    சென்னையில் தற்போது இயக்கப் படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வழி த்தடத்தில் பயணிகளுக்கான தேவை அதி கரித்துள்ளது. கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திரு முல்லைவாயல், ஆவடி வழியாக பட்டா பிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.  அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி ரயில் நிலை யம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்துக்கு முன்பு என 3 இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கி ணைந்து கட்டப்படும். மொத்தம் 21.76 கி.மீ. தூரம் கொண்டுள்ள இந்த தடத்தில், 19 இடங்களில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மொத்தம் ரூ.9,744 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மதிப்பீடு தயாரிக் கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில மற்றும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மெட்ரோ ரயில் நிலையங்கள்  இத்திட்டத்தில், கோயம்பேடு, பாடி புது நகர், பார்க் சாலை, கோல்டன் பிளாட் சந்திப்பு, வாவின் முதல் பிரதான சாலை, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திரு முல்லைவாயல், வைஷ்ணவி நகர், முரு கப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டா பிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்க ளில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. மேலும், ஆவடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலை யங்களுக்குச் செல்லும் வகையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.