tamilnadu

img

'கலைஞர் 100 வினாடி வினா’ போட்டி - முதல் பரிசு ரூ.10 லட்சம்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டி நடைபெற்று வருகிறது. 

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிரணி சார்பில் கனிமொழி எம்.பி முன்னெடுப்பிலும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டி கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 18 வயதுக்குட்பட்ட பிரிவு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது.

kalaignar100.co.in என்ற இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். இணையவழி சுற்று, மண்டல சுற்று, அலரயிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டி என நான்கு கட்டங்களில் 'கலைஞர் 100 வினாடி வினா’ போட்டி நடைபெறுகிறது.

18 வயதிற்குப்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவினருக்கும் முதல் பரிசு தலா 10 லட்சமும், இரண்டாம் பரிசு 6 லட்சமும், மூன்றாம் பரிசு 3 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.