சென்னை,ஜூலை 18- தமிழக சட்டப்பேரவையில் செய்தி விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் தமிழ்ச் செல்வன்,“ பத்திரிகையாளர்களை பாதுகாக்க நல வாரியம் அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,“ இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.