சென்னை, ஜூன் 8- சென்னை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் நகர் சுந்தரேசன் தெருவில் வசித்தவர் செந்தில்குமார் (38). இவர் மாலைமுரசு தொலைகாட்சி யில் தாம்பரம் செய்தியாள ராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வண்ட லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க பைக்கில் சென்று கொண்டி ருந்தார். வண்டலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த டிப்பர் லாரி செந்தில்குமார் பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து காவல் துறையினர் செந்தில்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான செந்தில்குமாருக்கு மனைவி யும், 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விபத்தில் செய்தியாளர் பலியான சம்பவம் பத்திரிகையா ளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. செந்தில்குமாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும் மறைந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்ப த்திற்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.