தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் மற்றும் வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
பணி: Skilled Assistant Grade - II (Electrician Grade - II)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன், வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Skilled Assistant Grade - II
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) /DW பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2021
மேலும் விவரங்களை அறிய "http://www.mrb.tn.gov.in/pdf/2021/Electrician_Grade%20_II_Notification_29_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.