tamilnadu

img

திருத்தணியில் ஜெகத்ரட்சகன் பிரச்சாரம்

திருவள்ளூர், ஏப்.8- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் திங்களன்று (ஏப்.8) திருத் தணி நகராட்சி மற்றும் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.திமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜி.ரவி, நகரச் செயலாளர் பூபதி, விசிக மாவட்டச் செயலாளர் சித்தார்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பெருமாள், வி.அந்தோணி, வட்டச் செயலாளர் அப்சல் அகமது, முன்னணி ஊழியர்கள் ஏ.கரிமுல்லா, ஜெயவேலு, எம்.கரிமுல்லா, ரகுபதி மற்றும் மதிமுக, இந்திய முஸ்லிம் லீக், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.