சென்னை:
நீட் தேர்வை கொண்டு வந்தது உச்ச நீதிமன்றம் அல்ல என்றும் பாஜகதான் என்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உறுதிப்படதெரிவித்தார்.
நீட் தேர்வு தமிழத்திற்கு தேவையா?என்பது குறித்து கல்வி பாதுகாப்பு குழுநடத்திய கருத்துக் கணிப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தமான் பேசுகையில்,“ தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் எதிர்க்கும் நீட்தேர்வை நடத்துவதில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியும் விடாப்பிடியாக இருக்கிறார். தமிழ்நாடு அமைத் துள்ள ராஜன் குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல்செய்த பாஜகவும், நீட் தேர்வை உச்சநீதிமன்றம்தான் கொண்டு வந்தது என்று தொடர்ந்து ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே வருகிறது. நாட்டில் என்னதேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் திற்கு கிடையவே கிடையாது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வை கொண்டுவரவில்லை” என்பதை உறுதிபட தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மக்கள் நிராகரித்ததையும் ஒரு தொழிலாளி வேலை நீக்கப்பட்டால் நேரடியாக தொழிலாளர் நீதிமன்றத் திற்கு செல்ல முடியும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாற்றையெல்லாம் நினைவு கூர்ந்ததோடு, கல்விக்கு என்றுதமிழ்நாட்டில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது உச்சநீதிமன்றம் அல்ல. பாஜகஅரசுதான் என்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கி, ஒன்றிய பட்டியலுக்கு கொண்டு சென்றது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதே நிலை நீடித்தால் நாட்டின் ஒற்றுமை குலைந்துவிடும்.