சென்னை:
கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளிகளில் தற்காலிக பணி தரப்படும் என்றும் கூறினார்.