tamilnadu

img

11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் எழவில்லையாம்

சென்னை:
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் வழக்கில் புதிய திருப்பமாக, புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்கும் படி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக் கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல் வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில், தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப் பட்டது. அதைல், ‘உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் தலைவர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உச்சநீதிமன்றம்  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது.இந்நிலையில், 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அதில் ‘உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. தற்போது 11 பேரும் அதிமுகவில் இணைந்துசெயல் படுகின்றனர். எனவே ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண் டிய அவசியம் எழவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேரும் 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.