tamilnadu

img

ஊரடங்கு நீட்டிப்பா? இல்லையா? தாமதமின்றி முடிவெடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தாமதமின்றி ஒரு முடிவை எடுக்கவேண்டுமென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய - மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். 35 நாட்களாக முடங்கியிருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் முடிவெடுக்க வேண்டும்.