சென்னை,பிப்.13- பாலியல் புகாரில் ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெண் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.