tamilnadu

img

சென்னையில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது.... கெடுபிடி, அராஜகத்தில் காவல்துறை....

சென்னை:
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற மாற்றுத்திறனாளிகள் புதனன்று சென்னையில் ஆணையரகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். கெடுபிடி, அராஜகத்தில் ஈடுபட்டகாவல்துறையினர், போராட்டக்காரர் களை கைது செய்தனர்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 ஆயிரமும், கடும்ஊனமுற்றோருக்கு ஆயிரம் ரூபாயும் மாத உதவித் தொகை வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி குறைந்தபட்சம் தனியார் துறை பணிகளில் 5 விழுக்காடு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடுஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திற
னாளிகள் ஆணையரகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட ஒன்றுதிரண்டனர். ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் தடுப்புசுவர்களை அமைத்தனர்.  காவல்துறையினரின் கெடுபிடிகளை மீறி  சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கேபி.பாபு, நிர்வாகிகள் ஜீவா, பாரதி அண்ணா, மாரியப்பன் மற்றும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள்  பங்கேற்றனர்.இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜான்சிராணி, “மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி அரசு அலுவலகங்கள் முன்பு குடியேறும்போராட்டத்தை அமைதியாக நடத்தி னோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்து, தேவையில்லாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தினர் என்று குற்றம் சாட்டினார்.மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை துறையின் அமைச்சரும் உயர் அதிகாரிகளும் உடனடியாக நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார்.