பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை – வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து, எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட மற்றும் தளர்வான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை கையாண்ட பிறகு ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
மேலும் சானிடைசர்களை உபயோகித்து விட்டு மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும், மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும் என மாநில பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.