tamilnadu

img

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தல்

ஜூலை 14  மின்வாரியத்தில் பணி பெரியவர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கள்ளக்குறிச்சி கிளை 2ஆவது மாநாடு  ஞாயிறன்று (ஜூலை 14)  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.  ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திட்டச் செயலாளர் ஆர். ராஜாமணி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலை வர் கே.சீனிவாசன் வர வேற்றார். தலைவர் கே.எஸ்.அலி தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் ஏழுமலை அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் கே.விஜயகுமார் வேலை அறிக்கையினை முன்மொழி ந்தார். பொருளாளர் இ.காமராஜ், ஆர்.சங்கர், எம்.சிவக்குமார், ஜி. கண்ணன், எஸ்.சுதர்சனம், இராமு, ஜே.ரஸியா பேகம், ஆர்.பானுமதி, எம். ப்ரியா, கே.மகேஸ்வரி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். சிஐடியு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜசேகர், ஓய்வு பெற்றோர் அமைப்புத் தலைவர் ஆர்.அம்பாயிரம், மின் பொறியாளர் அமைப்பின் திட்டச் செயலா ளர் எஸ்.சம்பத் ராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பழனி வேல் நிறைவுரையாற்றினார் கோட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னதாக உளு ந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் இருந்து பிரதிநிதி கள் பேரணி நடைபெற்றது. மின்துறையை பொதுத்துறையாக பாது காத்திட வேண்டும், மூன்றாகப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமலாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

புதிய நிர்வாகிகள்
தலைவராக கே. விஜயகுமார், செயலாளராக கே.சீனிவாசன் பொருளாள ராக கே. வெங்கடேசன் உள்ளிட்ட 19 பேர்கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.