சென்னை,மார்ச் 23- முப்பத்து மூன்று வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் சல்கோகர் 2020-ம் ஆண்டின் இளம் உலகளாவிய இளம் தலைவர்கள் மன்றத்தின் பெருமைமிகு பட்டியலில்இணைந்துள்ளார். அவர், சுரங்கம் மற்றும் இயற்கை வளத் தொழில்களை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கத்தக்க நிலையான மற்றும் சமூகப் பொறுப்புடனான புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை புகுத்தியதோடு, வணிக ரீதியாக செயல்படுத்துவதன் மூலம் தனக்கென தனித்துவமான மரபுகளை உருவாக்கி வருகிறார்.இதனால் அவர் 2020 ஆண்டுக்கான ’உலகளாவிய இளம் தலைவர்கள் மன்றத்தின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.