சென்னை:
பள்ளிகளில் சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றி எளிமையாக கொண்டாட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவினை வருகிற 15 ஆம் தேதியன்று அனைத்துமுதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்விஅலுவலகங்கள், அனைத்துவகை பள்ளிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடவேண்டும். கொரோனா தொற்று தடுப்புநடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராடும் பொருட்டு அவர்களை சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோல், கொரோனா தொற்றுஏற்பட்டு தற்போது பூரணகுணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.இந்த விழாவில் சமூகஇடைவெளியை பின்பற்றுவதோடு, முகக்கவசம் அணிந்து,கூட்டங்களை தவிர்க்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.