tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவை ஊர்தி துவக்கம்

சென்னை,டிச.5- சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறந்த சாதனை புரிந்த மற்றும் சிறப்பாக சேவையாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். பின்னர், விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.