சென்னை, ஆக.29- தமிழகத்தில் 5 மாவட் டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நில வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள கோவை, நீல கிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் இலே சானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசா னது முதல் மிதமான மழை யும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யும். சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த 49 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டியும் பாதிவாகக்கூடும். வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசம் என்பதால் மீனவர்கள் அந்தபகுதி களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.