சென்னை:
சென்னையில் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இக்காலங்களில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. ஆனால் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் முழு பால்தேவையையும் ஆவின் நிறுவனத்தால் பூர்த்தி செய்யமுடிவதில்லை. இதனால் பல இடங்களில் மக்கள், தனியார் பால் நிறுவனங்களை நம்பியுள்ளனர்.
ஆனால் அந்தநிறுவனங்கள் பால் உற்பத்தி செய்தபோதிலும் சென்னையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பொருட்களை கொண்டு செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் பால் விநியோகம் தடைபட்டுள்ளதாக திருமலா, டோட்லா. ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் புகார் செய்துள்ளன. எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால் விநியோகம் தடையின்றி நடைபெற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.