சென்னை, ஏப்.60 பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீட்டு கோரிக்கைகள் அனைத்தையும் மிக விரைவாக செயல்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஆயுள் காப்பீட்டு கவுன்சில், தெரிவித்துள்ளது.
தேவையில்லாமல் பரவும் வதந்திகள் குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளது. கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்கள் எற்கனவே பாலிசி தாரராக இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அனைத்து காப்பீட்டு இழப்பீடுகளும் இந்த இறப்புக்கும் பொருந்தும் என்றும் ஆயுள் காப்பீட்டுக் கவுன்சில் உறுதி அளித்துள்ளது.