tamilnadu

img

அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க முடியும்..... அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு....

சென்னை:
தமிழகத்தில் அறிவித்திருக்கும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடித்து ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப் பேற்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.மே மாசம் 11ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ஆனால் 10 மணிக்கு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முதல் நாளில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும், அடுத்த நாளில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களும் நடைபெற உள்ளது.இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில், நாளை முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நமது மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு சரியாக நடைமுறை படுத்தப்பட்டால் மட்டுமே தொற்றின் பரவலை கட்டுப்படுத்தி உயிர் இழப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே அமைச்சர் கள் அனைவரும் தமது க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்துவது உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.தமிழகத்தில் தற்போது பல நெருக் கடிகளுக்கு இடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆக்ஸிஜன் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எவ்விதமான சூழலிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.சென்னை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பு அதோடு இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனையாவது தடுப்பதுடன் போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப் பட்டுள்ளது அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்துவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்படவேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மருத்துவத்துறை வருவாய்த் துறை காவல்துறை நகராட்சி வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றிபெற முடியும் எனவே அமைச்சர்கள் அனைவரும் துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.