மின் அரங்க வடக்கு இடைக்கமிட்டி உறுப்பினர் இரா.ஆடலரசு ஆ.சுசிலா தம்பதியின் மகன் ஆ.அஜித் இளஞ்செழியன், வ.வினாயகம், ஷீலா தம்பதியின் மகள் மருத்துவர் வி.ராஜஸ்ரீ ஆகியோர் திருமண வரவேற்பு விழா திருமுல்லைவாயிலில் உள்ள தமிழ்நாடு போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது. சிபிஎம் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், சி.சுந்தரராஜ், வி.கமலநாதன், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மேற்கு கிளை செயலாளர் டி.கே.சம்பத்ராவ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை செயலாளர் எஸ்.எஸ்.கனேஷ் ராவ், துணைத் தலைவர் பி.எஸ்.முனியாண்டி, கட்டுமான சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் லூர்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.