சென்னை, மே 11 - அரசுப்பள்ளியில் மாணவர்களைசேர்க்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (மே 11) தரமணியில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. வேளச்சேரி பாலர் (சங்கம்) பூங்கா சார்பில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் ஏராளமான பள்ளிமாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நீர்நிலை பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பெண்குழந்தைகள் பாதுகாப்பு, அரசுப்பள்ளிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதகைகளை மாணவர்கள் ஏந்தி மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.மாணவி அபர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் பாலர் அரங்க மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம்,தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் கே.வனஜகுமாரி, ஆசிரியர் ஸ்டாலின், பலகுரல் பேச்சாளர் த.கிருஷ்ணா, மாணவர்கள் தீபிகா, யு.சஞ்செய் உள்ளிட்டோர் பேசினர்.