tamilnadu

img

வீட்டிலேயே செடி வளர்ப்பது எப்படி பயனளிக்கும் தோட்டக்கலை கோடைக் கால பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 26-தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக் கலைபயிர் வளர்ப்பு குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் மாநிலம் முழுவதிலும்உள்ள 62 பண்ணைகளிலும், 19 பூங்காக்களிலும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் தோட்டக் கலைத்துறை குறித்த தகவலகல், தோட்டக்கலை பயிர் வளர்ப்பது, வீட்டிலேயே அலாங்காரச் செடிகள் வளர்ப்பது, வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தல், வீட்டிலேயே காளான் வளர்ப்பது, சாக்லேட் தயாரிப்பது, மாடி தோட்டம் அமைப்பது, வீட்டில் உள்ள மக்கும் குப்பைகளை வைத்து இயற்கை உரம் தயாரிப்பது, செடிகளில் ஏற்படும்பூச்சி, புழுக்களை எப்படிகண்டறிவது உள்ளிட்டபயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.ஒருவருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறும்அதேபோல் சென்னையில் மாதவரத்தில் உள்ள வேளாண் தோட்ட பண்ணையிலும், செம்மொழி பூங்காவிலும் இந்த பயிற்சி முகாம்நடைபெறுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் பி.யோகானந்த் கூறுகையில், தமிழகத்தில் முதன்முறையாக இந்த பயிற்சி முகாம் இந்தாண்டுதான் துவங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வருபவர்கள் வாரத்தில் ஏதாவது 3 நாளைஇடைவெளி இல்லாமல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 3 நாட்களுக்கு 300 ரூபாய் கட்டணம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தோட்டக் கலை செடி வழங்கப்படும். இங்கு பயிற்சி முடித்தவர்கள் வீட்டிலேயே ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கனிகள், கீரை வகைகளை எளிதாக பயிர் செய்து கொள்ளலாம்.இங்கு 360 வகையான பூச்செடிகளும், 30 வகையான மரச்செடிகளும் விற்பனை செய்கிறோம். ஒருசெடியின் விலை 10 ரூபாயில்இருந்து 60 ரூபாய் வரைஉள்ளது. மேலும் கத்திரிக்காய், பச்சைமிளகாய், தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், நூல்கோல் போன்ற காய்கனியின் நாற்றுகளும் விற்பனை செய்கிறோம். ஒரு நாற்றின் விலை 1 ரூபாய் மட்டுமே. ஊட்டமேற்றிய தொழு உரம் 10 கிலோ 80 ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.2018 - 2019ஆம் ஆண்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு 62 ஆயிரம் செடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்போது பொதுமக்களிடையே இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பயிற்சிமுகாமில் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள் என்றார்.பயிற்சியில் சேரவிருப்பம் உள்ளவர்கள் றறற.வாhடிசவiஉரடவரசந.வn.படிஎவ.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மாதவரம் பண்ணையில் பயிற்சி பெற விரும்புவோர் யோகானந்த் 97155 88927 என்ற எண்ணிலும், செம்மொழி பூங்காவில் பயிற்சி பெற விரும்புவோர் தொடர்கொள்ள சரவணகுமார் 72993 06655 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.