சென்னை:
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்துநிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கைஅரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் வாழ்கிற தமிழர்களைப்பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக ஜனாதிபதியாகத் தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியபொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக்கருதுகிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில்பெரும்பாலான தமிழர்கள் கோத்தபயவுக்குஎதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதேஇந்த அச்சத்திற்குக் காரணமாகும்.இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான்அவர்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவிற்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒருமாநிலம் அமைவதே இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கைத் தமிழர்களும் விரும்புகிறார்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீர்வாக இருக்க முடியாது.
நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு 13-ஆவது திருத்தத்தின்படி நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரப் பகிர்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இத்தகைய உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடி தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிறவகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகநிகழ்ந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.