சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பி.சுகந்தி கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி மருத்துவமனை திறப்பு விழாவில் பேசும் போது, பெண்களில் 30 விழுக்காடு பெண்கள் மட்டுமே பெண்மையுடன் இருக்கிறார்கள். அந்த 30 விழுக்காடு பெண்களை நான் தெய்வமாக வணங்குகிறேன் என்றும் பேசியுள்ளார். நகர்ப்புற வாழ்க்கையும், ஆங்கிலம் கற்பதும்தான் பெண்மையோடு இல்லாததற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த ஆணவமான ஆணாதிக்க பேச்சை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குருமூர்த்தி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்த பல பேர் இதுபோல் பெண்களை இழிவாக பேசி வருகிறார்கள். பெண்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும், பெண்கள் கல்வி கற்கக் கூடாது, வேலைக்கு செல்லக் கூடாது, வீட்டு வேலை மட்டுமே செய்யக் கூடியவர்களாக, வெறும்குழந்தை பெற்றுத் தரும் இயந்திர மாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தை எப்படியாவது சட்டமாக கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் உரு வாக்கிக் கொடுத்த அரசியல் சட்டத்தை அடியோடு நொறுக்கி விட்டு மீண்டும் மனுதர்மத்தை கோட்பாடாக இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். அத னுடைய ஒரு பகுதியாகத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் இப்படி பெண்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள்.
பாஜகவில் பெண்களே இல்லையா? அப்படியென்றால் இப்படி பேசும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினரை ஏன் தமிழிசை சவுந்தரராஜன் கண்டிக்கவில்லை. பாஜக பெண் தலைவர்கள் ஏன் கண்டிக்கவில்லை. எனவே பெண்களை இழிவுபடுத்தி பேசிய குருமூர்த்தி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமூர்த்தி உடனடியாக தனது இழிவான பேச்சை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து பெண்கள் கூட்ட மைப்பு சார்பில் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.