tamilnadu

img

JEE முதன்மை தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை!

JEE முதன்மை தேர்வில் 448 தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
448 அரசு பள்ளி மாணவர்கள் JEE மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு சாதனை மட்டுமல்ல — தமிழ்நாடு முழுவதும் வகுப்பறைகளில் அமைதியாக நடைபெற்று வரும் திராவிட மாடல் மாற்றத்தின் வெளிப்பாடாகும்.
இந்தத் தேர்வில் பிரவீன் 99.53 சதவீதம், நரேஷ் 99.50 சதவீதம், வேல்முருகன் 99.42 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் பல அரசு பள்ளி மாணவர்கள் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மாணவர்களுக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும், மக்களை முன்னிலைப்படுத்தும் இந்த ஆட்சிக்கும் சொந்தமானது என அவர் தளத்தில் பதிவிட்டுள்ளார்