tamilnadu

img

கனமழை எச்சரிக்கை

சென்னை,அக்.12-  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார்.

இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இடைக் காலத்தில் தொடங்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதி காரிகளை கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்- பேரிடர் மேலாண்மைத் துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயா ராக உள்ளது. வரும் 15 முதல் 17 வரை யிலான தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களு க்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  தயார் நிலையில் உள்ளனர். பால், குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்க ளை மழைக்கு முன்பாகவே தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு உதவ தயாராக உள்ள னர். நீர் நிலைகளை கண்காணித்து வருவதோடு 24 மணி நேரம் செயல் படும் மாநில அவசரகால செயல் பாட்டு மையமும் மக்களுக்கு உதவ காத்திருக்கிறது” என்று தெரிவித்துள் ளார்.