tamilnadu

img

அரசு மருத்துவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை,அக்.24- அரசு மருத்துவர்கள் தமிழகம்  முழுவதும் அக்.25 வெள்ளிக்  கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 24 அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் 18 ஆயிரம் மருத்து வர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  சம்பள உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. ஜனநாயக அரசு மருத்துவர் கள் சங்கம், அரசு மருத்துவர் மற்றும் பட்ட மேற்படிப்பு மாண வர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்,  அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம், சர்வீஸ் மருத்துவர்கள் வெல்பர் அசோசியேஷன் ஆகிய 5 சங்கங்கள் இணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  இதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. கிராமப்புறங்களில் மருத்  துவ சேவையாற்றும் மருத்துவர்க ளுக்கு முதுநிலை மருத்துவ படிப்பிலும், சிறப்பு மருத்துவ மனையிலும் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவ படிப்பை முடித்தவர்க ளுக்கு நேரடியாக கலந்தாய்வு  மூலம் பணி நியமனம் வழங்க  வேண்டும் என்ற 4 கோரிக்கை களை முன் வைத்து போராடி வரு கிறோம். கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக அமைச்சர்  எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தும் அதனை நிறைவேற்ற வில்லை. இடைத்தேர்தல் விதி முறை நடைமுறையில் இருப்ப தால் காத்திருக்கும்படி கூறினார். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்  பட்டன. அதனால் வியாழனன்று (அக்.24) மாலைக்குள் நல்ல  முடிவை அறிவிக்க வேண்டும்.  இல்லையென்றால் திட்டமிட்ட படி வெள்ளியன்று(அக்.25) வேலை நிறுத்தம் காலை 8 மணி முதல் தொடங்கும். அரசு மருத்துவர்களை போராட்டத்துக்கு தள்ள வேண்டாம் என்று நினைக்கி றோம். ஆனால் தொடர்ந்து அரசு பிடிவாதமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் போராடுகிறோம். வெள்ளிக்கிழமை முதல் அரசு  மருத்துவர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். அவசர அறுவை  சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை தவிர வேறு  எந்த மருத்துவ பணியிலும் ஈடு பட மாட்டார்கள். அனைத்து புற நோயாளிகள் பிரிவும் செயல் படாது. தேர்வு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பணிகளும் நடைபெறாது. உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சேவையும்  பாதிக்கும். அரசு மருத்துவமனை களுக்கு வரும் லட்சக்கணக்கான  நோயாளிகள் பாதிக்கப்படு வார்கள். இந்த வேலை நிறுத்தத் தில் மூத்த மருத்துவர்கள், பேரா சிரியர்கள், உதவி பேராசிரி யர்கள், முதுநிலை பட்ட மேற்  படிப்பு மாணவர்கள், உதவி மருத்துவர்கள் பங்கேற்பதால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கும். அதனால் இந்த பிரச்ச னையில் முதலமைச்சர் தலையிட வேண்டும். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யாமல் உடனே அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவர்கள் மீது  அடக்குமுறை மற்றும் நடவ டிக்கையில் ஈடுபட்டால் அவசர அறுவை சிகிச்சை மற்றும் காய்ச்சல் பிரிவுகளிலும் மருத்து வர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.