ராமநாதபுரம் அருகே ரயில் வரும் போது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், வாலாந்தரவை ரயில்வே கேட்டை கடக்கும்முன், கேட் மூடப்படாததை லோகோ பைலட் கவனித்தார். உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு, கேட் கீப்பரிடம் கேட்டையை மூடுமாறு அறிவுறுத்தினார். பின்னர் கேட் மூடப்பட்டதும் ரயிலை மீண்டும் இயக்கி சென்றார். இந்த நிலையில், கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் ஜெயசிங்கை பணியிடை நீக்கம் செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.