இளைய தலைமுறைக்கு நம்பிக்கை தரும் டீச்சர்!
கேரளாவின் முன்னாள் சுகா தாரத்துறை அமைச்சர், கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சைலஜா டீச்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் “மக்களின் தோழர்” ஒரு சாதாரண வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல - கேரளாவின் சமூக மாற்றத்தின் வரலாறும் கூட. 1957ல் பிறந்த சைலஜா, கம்யூனிஸ்ட் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் வளர்ந்த வர். ஜென்மி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய கல்யாணி பாட்டியின் குடும்பமும், கட்சியின் தியாக வரலாறும் இவரை வடிவ மைத்தன. சேலம் சிறைச்சாலை படுகொலை யில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கம்யூனிஸ்ட் கட்சியின் வேர்களை உள்ளத்தில் கொண்டவர். கல்லூரி காலத்திலேயே கட்சி உறுப்பின ராகி, வாலிபர் சங்கத்தில் தீவிரமாக பணியாற்றி னார். பாஸ்கரன் மாஸ்டரை திருமணம் செய்து கொண்ட பின், இருவருமே கட்சி வளர்ச்சிக்காக உழைத்தனர். ஆசிரியையாக பணியாற்றிய காலத்தில் கூட அரசியல் வேலைகளை கைவிடவில்லை. 1996ல் முதல்முறையாக கூத்துபரம்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் அமைச்சரான பின், ஒக்கி புயல், 2018 பெருவெள்ளம், நிபா வைரஸ், கோவிட் போன்ற தொடர் சவால்களை எதிர்கொண்டார். குறிப்பாக நிபா வைரஸ் தொற்றின்போது, செவிலியர் லினியின் தியாகமும், 40 நாள் போராட்டமும் இவரை உலுக்கியது. கேரள சுகாதார அமைப்பை பலப்படுத்தி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்து வக் கல்லூரிகள் வரை மேம்படுத்தினார். 500 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதை 100 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற இலக்கை நோக்கி நகர்த்தினார். மார்க்சிய தத்துவத்தை வாழ்க்கையில் கடைபிடித்த சைலஜா, பெண்களின் விடுதலை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்காக போராடி னார். காரல் மார்க்ஸின் கல்லறையைப் பார்த்த போது உணர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். நூலில் கேரள மாடலின் அடிப்படைகள், அரசு-மக்கள் உறவு, பேரிடர் மேலாண்மை, பெண்ணியம் போன்ற அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அறிவியல் மனோ பாவம், சமத்துவ சிந்தனை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையின் பதிவு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நம்பிக்கையும் தியாகமும் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான நூல்.