tamilnadu

தருமபுரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட விழா

தருமபுரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட விழா

தருமபுரி தடங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற மாபெரும் அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 லட்சம்  ரூபாய்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனுடன் 362 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான 1,073 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,044  பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  விழாவிற்கு முன்னதாக ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலிமாறன் பிறந்தநாள் நினைவாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், நாட்டிற்கே முன்னோடித் திட்டமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.  விழாவில் பேசிய முதலமைச்சர், “தருமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழில்பூங்கா இன்று திறக்கப் பட்டது. 12 கோடியே 39 லட்சம் ரூபாயில் ஆரம்பகட்ட பணிகள் முடிந்துள்ளன. அடுத்த கட்டமாக 200 ஏக்கரில் 93 கோடி ரூபாயில் உட்கட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 7 தொழில் நிறுவ னங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இம்மாவட்டத்திற்கு 447 கோடியே 26 லட்சம் ரூபாயில் 43 லட்சத்து 86 ஆயிரத்து 926 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.  விழாவில் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முத லமைச்சர், சித்தேரி ஊராட்சியின் 63 மலைக்கிராமங்களையும் கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் போன்ற கிராமங்களையும் அருகாமையிலுள்ள அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கும் முடிவை அறிவித்தார். ஒகேனக்கல்-தருமபுரி மாவட்ட நெடுஞ்சாலையில் ஆட்டுக்காரம்பட்டி முதல் பென்னாகரம் வரையுள்ள 25 கிலோமீட்டர் சாலையை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக 165 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக மேம்படுத்துவதாகவும் அறிவித்தார். பரிகம் முதல் மலையூர் வரையுள்ள வனச்சாலையை 10 கோடி ரூபாயில் தார்ச்சாலையாக மேம்படுத்துவது, நல்லம்பள்ளி அரசு  மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7.5 கோடி ரூபாயில் புதிய  வகுப்பறை கட்டடங்கள் எழுப்புவது, புளி உற்பத்தி விவசாயிகளுக் காக 11 கோடியே 30 லட்சம் ரூபாயில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைப்பது, அரூர் நகராட்சி மக்களுக்கு