சென்னை:
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் தளர்வுகள் தேவை இருந்திருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கு கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால், ஊரடங்கு காலத்தில்தான், பாதிப்பு எண்ணிக்கை இத் தனை ஆயிரம் அதிகரித்துள் ளது. ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தால், அதனால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கைத் தளர்த்தியது அரசு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்குத் தளர்வுகள் தேவையிருந்திருக்காது.சென்னையின் 5 மண்டலத்தை மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து, அரண் போல் அமைத்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காப்பாற்றுங்கள். அப்படி செய்யும்போது, அப் பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் அரசே அவர்களின் இருப் பிடம் தேடி வழங்கி உதவ வேண்டும்.
அனைத்து தேவைகளையும் வழங்கி மக்களை வீட்டுக் குள் தனிமைப் படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது.ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமன்றி, அடுத்தடுத்து தேவையான மருத்துவக் கட்டமைப்பை திட்டமிட்டு, கொரோனாவை தடுப்பதே அரசின் கடமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.