சட்டக் கல்லூரி: அமைச்சர் கைவிரிப்பு
நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, ”காவிரி டெல்டா மாவட்ட முக்கிய நகரங்களில் நாகை நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இந்த பகுதியில் அரசு சட்டக் கல்லூரி துவங்கினால் டெல்டா பகுதி மாணவர்கள் முழுமையாக பயனடைவார்கள்” என்றார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்,” ஏற்கனவே அரசு சார்பில்14 சட்டக்கல்லூரிகள் உள்ளதால் நாகப் பட்டினத்தில் தற்போதைக்கு அரசு சட்டக் கல்லூரி துவங்க வாய்ப்பு இல்லை என்றும் சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் சட்டக் கல்லூரியை துவங்க தனியார் முன்வந்தால் அரசு உடனடியாகத் அனுமதி அளிக்கும்” என்றார்.
மின் நிலையம் அமைக்க தயார்
சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்கள் தொகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இடம் கிடைப்பது தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. துணை மின் நிலையத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்களே இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக துணை மின் நிலையம் அமைத்துக் கொடுக்க அரசும் மின் வாரியமும் தயாராக உள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.