tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்.... வீராங்கனை கல்பனா தத்தா பிறந்த நாள்

கல்பனா தத்தா சிட்டகாங் மாவட்டத்தின் (தற்போதைய வங்கதேசத்தில் பெல்காலிய உபசீலாவில்) 1913 ஆம் ஆண்டு ஜூலை 27ல் பிறந்தார். 1929 ஆம் ஆண்டு சிட்டகாங்கில் ஆரம்பக்கல்வி பயின்ற இவர் பிறகு, கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் சேர்ந்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். விரைவில், பினா தாஸ் மற்றும் பிரிட்டிலாடா வதேடார் போன்றோரின் செயல்பாட்டில் இருந்த ஒரு அரை புரட்சிகர அமைப்பான “சத்ரி சங்கம்” (பெண்கள் மாணவர் சங்கம்) என்ற அமைப்பில் சேர்ந்தார்.

1931 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சிட்டகாங்கில் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டது. கல்பனா “இந்தியகுடியரசு இராணுவத்தின், சத்தாகிராம் கிளை” யில் இணைந்தார். சரண் சென் தலைமையிலான ஆயுதம் தாங்கிய போராளி குழு ஒன்று 1931 ஆம் ஆண்டு மே மாதத்தில் உருவாக்கப்பட்டது, அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் “சூர்யா சென்”னிடம் சென்றுசேர்ந்தார். இவர்கள் “பிரிட்டிலாடா வதேடாருடன்” இணைந்து சிட்டகாங்கில் உள்ள ஐரோப்பிய விடுதியைத் தாக்க திட்டமிட்டனர். தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு, அந்த பகுதியின் உளவுபார்க்கும் போது இவர் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்டபின் அவர் மறைந்து வாழ்ந்தார். 1933 பிப்ரவரி 17, அன்று காவலர்களால், சூர்யா சென் கைது செய்யப்பட்டார், ஆனால் கல்பனா தப்பித்துக்கொண்டார். இறுதியாக 1933 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிட்டகாங்கின் ஆயுத சோதனை வழக்கின் விசாரணை யில், கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1939 இல் கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.

கல்பனா தத்தா 1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் சேர்ந்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றார், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். விவசாயிகள் மற்றும் பெண்களை அணிதிரட்டுவதில் கல்பனா முக்கியப் பங்காற்றினார்.1943 வங்காளப் பஞ்சம் மற்றும் 1947 வங்காளப் பிரிவின் போது நிவாரணப் பணியாற்றினார். அவர் பெங்காலி மொழியில் சுயசரிதை புத்தகம் எழுதினார். இது அருண் போஸ் மற்றும் நிக்கில் சக்ரவர்த்தியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், கல்பனாவின் கணவருமான பி.சி.ஜோஷி, “சிட்டகாங் ஆர்மரி ரெய்டர்ஸ்: ரெமிநிசென்ஸ்” என்ற ஆங்கில நாளிதழில் அக்டோபர் 1945 ல் வெளியிட்டார். இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் 1979ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. 1946ல், சிட்டகாங்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வங்காள சட்டப் பேரவைக்கான தேர்தலில் கல்பனா போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர், இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சேர்ந்தார். பிப்ரவரி 8, 1995 இல் கொல்கத்தாவில் காலமானார்.

1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி. ஜோஷியை மணந்தார். சந்த் மற்றும் சூரஜ் ஆகிய இரு மகன்களும் இருந்தனர். 2010இல் தீபிகா படுகோன் என்ற நடிகை கல்பனா தத்தா வேடத்தில் நடித்த இந்தித் திரைப்படம், கேலீன் ஹம் ஜான் சே, என்ற பெயரில் வெளிவந்தது. இப்படம் சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மற்றொரு படம், சிட்டகாங் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு அக்டோபர் 12, 2012 அன்று வெளியிடப்பட்டது.

===பெரணமல்லூர் சேகரன்===