சென்னை:
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர் களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்க ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு அரசால் ஏற்கெனவே அமைக் கப்பட்டுள்ளன.இந்நிலையில், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்க அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்:கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்க வேண்டும்.பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்க வேண்டும்.இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங் களையும் அரசே ஏற்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந் தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்க வேண்டும்.ஏற்கெனவே தாய் அல்லது தந் தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்ய வேண்டும்.ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சிம், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந் தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும்.அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறுவழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட,கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறைச்செயலர் உள்ளிட்ட அலுவ லர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.கேரள அரசும் இதேபோன்ற அறிவிப்புகளை வெள்ளியன்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத தக்கது.