tamilnadu

img

ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு செப்டம்பர் 27 வரை சிறை!

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து இழிவாகப் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனை செப்டம்பர் 27-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது சட்டப்பிரிவு 153, 153(A), 505(a) 505(b), 505(2),SC/ST உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று காலை சென்னை தி.நகரில் வைத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இவ்வழக்கு விசாரணையின் முடிவில், அவரை செப்டம்பர் 27-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.