tamilnadu

img

திமுக கூட்டணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவு

சென்னை,

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, ஐஜேகே, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளர். இன்று மாலை அவர் திமுக தலைவர் மு.கஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.