சென்னை:
தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கிரூ.2,900 கோடி நிதி உதவியளித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்துள்ளது. அரசுமருத்துவமனைகளில் தாய் -சேய் நல கவனிப்பு, உலகத்தரம்வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள்செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர்விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெரிவித்தார்.